கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் மற்றும் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பயிற்சி உதவி ஆட்சியர் ராஜட் பீட்டன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சங்கரலிங்கம், பத்மநாபபுரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி தாசில்தார் கோலப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பத்துகாணி, ஆறுகாணி, கற்றுவா, ஒருநூறாம்வயல், தோலடி உட்பட்ட 21 வன கிராமங்களில் வன உரிமை சட்டத்தின் கீழ் வன நில உரிமை வழங்குதல் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடந்தது . இந்த ஆய்வு கூட்டத்தில் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.