மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் செப்டம்பர் 2023 முதல் சிறப்பிக்கப்படுகிறது. அஞ்சல் துறையில் உள்ள அனைத்து திட்டங்களை பற்றிய விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்துவதும் மக்களை இத்திட்டங்களில் சேர்த்து பயனடைய செய்வதும் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவின் நோக்கமாகும். கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் சார்பில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது 22.9.2023 அன்று மதியம் 2 மணி அளவில் நாகர்கோவில் தமிழ்நாடு அரசு ஊழியர் நலச்சங்க கட்டிடத்தில் வைத்தும், மாலை 3 மணி அளவில் தக்கலை தலைமை தபால் நிலையத்தில் வைத்தும் நடைபெறுகிறது. இவ்விழாவில் மக்கள் அஞ்சல ஆயுள் காப்பீடு, இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, ஆதார் சேவைகள் சிறுசேமிப்பு திட்டங்கள், பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீடு திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், அதில் இணைந்து பயன் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என்று கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம்
முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.