கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் முன்னேற்ற சங்கம் செயற்குழு கூட்டம் வில்லுக்குறி எழில் திருமண மண்டபத்தில் வைத்து தலைவர் ஜெபசன் ஞான தேவ் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் தங்க மரியான், இணை தலைவர் ராமசாமி பிள்ளை,செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அறிக்கை துணை செயலாளர் மகா லெட்சுமி வாசித்தார். பொருளாளர் பெருமாள் பிள்ளை நன்றி கூறினார். கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் திரேசம்மாள், ஜாண் பேட்ரிக், தாஸ், தவசி, பிரசாத், சுதா, மனோ ரதி, தாவீது, பாப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர். வில்லுக்குறி வருவாய் கிராமம் ஏ உள்ள மேலப்பள்ளம் அருகில் உள்ள தூவலாறு பாலத்தை விரிவுபடுத்தி கேட்டு 12 வருடங்களாக பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வில்லுக்குறி பேரூராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த தகவலை குளச்சல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பிரின்ஸ்யிடம் தெரிவித்த போது மாவட்ட ஆட்சியாளரிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு காணலாம் என்று தெரிவித்ததை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.