விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Share others

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியாளர் த ஆஷா அஜித், தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்நாதன் (சிவகங்கை), மாங்குடி (காரைக்குடி) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கூட்டத்தில், சொட்டு நீர் பாசனம், கதிர் அறுவடை செய்யும் இயந்திரம் வழங்குதல், கண்மாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், உழவு மானியம் வழங்குதல், பின்ஏற்பு மானியம் வழங்குதல், துணை விதை விற்பனை அமைத்தல், பேட்டரி தெளிப்பான் மற்றும் வழங்கப்பட்டமைக்கான பின்றேப்பு மானியம், மழைநீர் வரத்துக்கால்வாய் இருபக்கமும் தடுப்புச்சுவர் கட்டுதல், இலவச வீட்டுமனை வழங்குதல், விவசாயிகள் சோலார் அமைப்புடன் கூடிய விளக்குப் பொறி மானியத்தில் வழங்குதல், நுண்ணூட்ட உரம் வழங்குதல், மற்றும் சொட்டு நீர்பாசனம் மானியம் வழங்குதல், சீல்டு கண்மாய் மூலம் தண்ணீர் வழங்குதல், உழவர் சந்தை அமைத்தல், குளிர்பதன கிடங்கு அமைத்தல், கண்மாய் கருவேல் மரங்களை ஏலமிடுதல்,
குடிநீர் ஊரணியில் முள்வேலி மற்றும் வரத்துக்கால்வாய் தூர்வாருதல், மின் இணைப்பு வழங்குதல், வைகை ஆற்றிலிருந்து உபரி நீர் வழங்குதல், கண்மாய் பெரியமடையை பலப்படுத்துதல், தார்சாலை அமைத்தல், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் மற்றும் பழுதான மின்கம்பத்தினை சரிசெய்தல், மின் இணைப்பு கூடுதல் பீடர் மற்றும் மின்கம்பிகள் பொருத்துதல்,
விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுபடுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், கிராமச்சாலையை சரிசெய்தல், ஊராட்சி சாலையை நெடுஞ்சாலைத்துறை சாலையாக தரம் உயர்த்துதல் பழுதான சாலை மற்றும் தடுப்புச்சுவர் அமைத்தல், பாலம் கட்டுதல், சேதமடைந்த கழிவுநீர் வாய்க்காலை சீரமைத்தல், புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல், போன்ற உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சியாளரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் தகுதியுடைய கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய களஆய்வுகள் மேற்கொண்டு, உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அவைகள் தொடர்பான மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்கும்படியும் மாவட்ட ஆட்சியாளர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகள் எடுத்துரைத்த கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் புள்ளி விபரங்களுடன் விரிவாக இக்கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவிக்கையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார்கள். அதன்படி, விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டும், வேளாண் தொழிலை உழவர்கள் எவ்வித இடையூறு இன்றியும் தேவையான அனைத்து வசதிகளுடன் மேற்கொள்ளும் பொருட்டும், பிரதி மாதந்தோறும் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கிணங்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாக பெற்றிடவும், தேவையான சான்றிதழ்களை வழங்கிடவும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், நில அளவைத்துறையினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், கண்மாய்களில் உள்ள மடைகள், தடுப்புச்சுவர்கள் பழுதடைந்து இருப்பின் விரைந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், மேலும் புதிய தடுப்பணைகள் கட்டித்தரவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருந்திடவும், கடனுக்குரிய மானியத்தொகையினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர்  ஆஷா அஜித், தெரிவித்தார். 

முன்னதாக இக்கூட்டத்தில், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், திட்ட விளக்க கையேட்டினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் வெளியிட்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் .ஜூனு, மற்றும் வேளாண்மை துறையின் இணை இயக்குநர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *