மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் குளச்சல் மற்றும் குழிச்சல் ஆகிய இடங்களில் சிறப்பிக்கப்பட்டது. குளச்சல் ஜேம்ஸ் நர்சிங் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்ற அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவில் குமரி மாவட்ட அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நிதிஷ் அஞ்சல் ஆய்வாளர் நாகர்கோவில் மேற்கு உப கோட்டம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்.பிரேம் குமார், ஜேம்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர், நசீர், தலைவர் குளச்சல் நகராட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். குழிச்சல் ஸ்ரீ கிருஷ்ணா கலையரங்கத்தில் வைத்து நடைபெற்ற விழாவில் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சரத், உதவி கண்காணிப்பாளர், குழித்துறை உபகோட்ட ஆய்வாளர் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சந்திர போஸ், உதவி இயக்குனர் வேளாண்மை துறை மேல்புறம் ஊராட்சி ஒன்றியம், அருமனை பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் 4, 5 மற்றும் 7 வது வார்டு பஞ்சாயத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் சிறுசேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் இணைதல், மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் வழியாக பெறுவதற்கு கணக்குகள் தொடங்குதல், பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீடு திட்டங்கள் தொடங்குதல் அஞ்சல் துறையின் அனைத்து சேவைகளை பற்றிய விவரங்களை மக்களுக்கு தெரிவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.