கல்வி உதவி தொகை புதுப்பித்தல்

Share others

அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ/ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின்  கீழ்  கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/ மிபிவ/ சீமமாணவ / மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும், முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு  பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
மேலும், நடப்பாண்டில் புதுப்பித்தல் மாணாக்கர்கள்  https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் Student Login  சென்று ஆதார் எண் அளித்து  e-KYC Verification செய்ய வேண்டும். இதில், ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுகவும்.

இக்கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான  இணையதளம் 18.10.2023 முதல் செயல்பட துவங்கும். புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை மாணாக்கர்கள்  18.11.2023-க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, மாணாக்கர்கள் தாங்கள் பயிலும்  கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித்  தெரிவித்துள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *