சிவகங்கை மாவட்டத்தில் மானகிரி பகுதியில் இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வளனார் தத்து வள மையம் செயல்படுகிறது. மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தலைமையில், முதல் தத்தெடுப்பு கூட்டம் நடந்தது .
அரசு விதிகளின்படி பதிவுபெற்ற ஒரு குடும்பத்தினர்களில், குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்து, விண்ணப்பித்த பெற்றோருக்கு, மாவட்ட ஆட்சியாளரால், இந்த கூட்டத்தின் வாயிலாக குழந்தை வழங்கப்பட்டது.
மேலும், சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகளை தத்தெடுக்க விருப்பம் உள்ளவர்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு வயது மற்றும் ஆவணங்களுடன், வளனார் தத்து வள மையம், மானகிரி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில், துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன், வளனார் தத்து வள மைய நிர்வாகி, சகோதரி. மேரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.