கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காற்றாடி முக்கு ஜங்ஷனில் இருந்து இரணியல் வள்ளியாற்று ரயில்வே மேம்பாலம் வழியாக மேல்பாறை செல்லும் ரோடு உள்ளது. இந்த சாலை வழியாக மேல்பாறை, சடையமங்கலம், சித்தன்தோப்பு, தாந்தவிளை, ஆழ்வார்கோவில் கிராமம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இந்த வழியாக வந்து செல்கின்றனர். சமீப காலமாக இந்த சாலை செம்மண் குவிந்து கிடக்கிறது. தண்டவாள விரிவாக்க பணிக்கு போடப்பட்ட செம்மண் மழையில் அரித்துவரப்பட்டு குவிந்து கிடக்கிறது. எனவே மாணவர்கள் உட்பட பொதுமக்கள் வந்து செல்ல சிரமப்படும் இந்த சாலையில் சேறும் சகதியுமாக குவிந்து கிடக்கும் செம்மண் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.