கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம்,
தாமிரபரணி
ஆற்றுபடுகைக்கு உட்பட்ட வைக்கலூர் பகுதியை மாவட்ட
ஆட்சியாளர் ஸ்ரீதர், பத்மநாபபுரம் சார் ஆட்சியர்
கௌசிக், முன்னிலையில்
நேரில் பார்வையிட்டு, தெரிவிக்கையில்
வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே பெய்ததால் தாமிரபரணி
ஆற்றுப்படுகைக்கு உட்பட்ட வைக்கலூர், ஆற்றங்கரை பகுதியில் அமைந்திருந்த 2
வீடுகள் சேதமடைந்து சாலைகள் அரிப்பு ஏற்பட்டதன் அடிப்படையில், ஆற்றோர
பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை
மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை மற்றும் நீர்வளம் ஆதாரத்துறையினருக்கு
அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தற்காலிகமாக சரி
செய்வதற்காக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், கிள்ளியூர் சட்டமன்ற
உறுப்பினர் மற்றும் கொல்லங்கோடு நகராட்சி பொதுநிவாரண நிதியிலிருந்து ரூ.35
லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது இந்த பணிகளை
விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நீர்வளத்துறை
அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர்
ஸ்ரீதர், தெரிவித்தார்.
ஆய்வில் மகளிர் திட்ட இயக்குநர் பாபு, நீர்வளத்துறை
உதவி பொறியாளர் மெல்கின், கிள்ளியூர் வட்டாசியர் அனிதா குமாரி,
உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.