கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகத்தின் சார்பில் கன்னியாகுமரி
பாராளுமன்ற தொகுதி வாக்கும் எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சியாளர்
ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்,
பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக், ஆகியோர் முன்னிலையில்
நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்:-
வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையமாக
செயல்பட உள்ள நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லுாரியில் வாக்கும் எண்ணும்
மையங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் என்ற முறையில் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாக்கும் எண்ணும் மையத்திற்கு தேவையான அனைத்து
வசதிகளையும் உடனடியாக மேற்கொள்ள தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும்
மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின் போது நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம்,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சங்கர நாராயணன், தேர்தல்
வட்டாசியர் சுசிலா, வட்டாசியர்கள் கண்ணன் (அகஸ்தீஸ்வரம்),
வினைதீர்ந்தான் (தோவாளை), கண்ணன்(கல்குளம்), முருகன் (திருவட்டார்),
குமார்வேல் (விளவங்கோடு) அனிதா குமாரி (கிள்ளியூர்), உதவி தேர்தல்
நடத்தும் அலுவலர்கள், பொது பணித்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து
வட்டாட்சியர்களும் கலந்து கொண்டனர்.