பிம்போ குழுவின் சார்பாக 40 வது மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டி கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு டிசம்பர் மாதம் 22 மற்றும் 23 ம் தேதிகளில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ பள்ளி மைதானத்தில் வைத்து நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணியினர் தங்களது அணியின் விவரத்தினை செயலாளர் ஆல்பர்ட் ராஜ்குமார் (செல் 77080 16 890 ) அவர்களிடம் டிசம்பர் மாதம் 10ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். போட்டி ஆட்டங்கள் காலை 9 மணி அளவில் தொடங்க உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இறுதி ஆட்டம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி அன்று மாலை 4 மணி அளவில் நடக்கும். ஆண்களுக்கான பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரமும் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசு ரூ. 10 ஆயிரமும் சுழற்கேடயமும் மற்றும் பெண்களுக்கான பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ. 10 ஆயிரமும் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசு ரூ. 7 ஆயிரத்து 500 ம் சுழற்கேடயமும் வழங்கப்படும். தனி நபர் பரிசுகளும், சிறப்பாக விளையாடும் அணிக்கும், வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பிம்போ குழுவின் தலைவர் பொறியாளர் பாரத் வில்சன், செயலாளர் ஆல்பர்ட் ராஜ்குமார் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.