‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை,
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு
4.12.2023 முதல் 6.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை
அறிவித்திருந்தது.
புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள்
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி,
நாளை (7.12.2023) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள்
மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்து உள்ளது.