வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா வில்லுக்குறி எழில் திருமண மண்டபத்தில் வைத்து நடந்தது. விழாவுக்கு வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை தலைவர் ஜாண் பேட்ரிக் தலைமை வகித்தார். விழாவில் கொடி அறிமுகம், கண்தானம் விருது, சமூக சேவகர் விருது, நூல் வெளியீடு, இலவச வேட்டி, சேவைகள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்தது.
இந்த நிகழ்வுகளில் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார், வில்லுக்குறி ஆயர் மண்டல திருச்சபை பாஸ்டர் காட்வின் சுஜேஸ், சி.எம்.எம். டயோசீஸ் ஆங்கிலிக்கன் சர்ச் பிஷப் மரிய ராஜ், வெள்ளச்சிவிளை இரட்சண்ய சேனை சபை மேஜர் வேதமாணிக்கம், இந்திய சுவிசேஷ லுத்தரன் சபை மணக்கரை புதுக்கிராமம், கூட்டுவிளை பாஸ்டர் மெர்கந்த் தாமஸ், கன்னியாகுமரி மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிந்துகுமார், ஓய்வுபெற்ற ஆசிரியர் அகஸ்டின், சமூக சேவகர் தக்கலை சந்திரன்,
வில்லுக்குறி வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், ஆசிரியர் ஜெபர்சன் ஞானதேவ், வில்லுக்குறி வட்டார மனிதநேய கூட்டமைப்பு செயலாளர் குமரேசன், திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரிட்டோ சேம், எழில் திருமண மண்டப நிர்வாகி தமிழ் உட்பட பலர் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கி சிறப்பித்தனர். செயலாளர் ஜஸ்டின் வேதமாணிக்கம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.