தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வெலி, தூத்துக்குடி,
கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்
தொடர் மழை பெய்ததன் காரணமாக இயல்புநிலை பாதிக்கப்பட்டது. தற்போது
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து வழக்கம்போல்
அனைத்து பள்ளி கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு
வருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று
வரும் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் பெய்த அதிகனமழையால் மழை
வெள்ளம் சூழ்ந்து வீட்டிற்குள் மழைநீர் புகுந்த காரணத்தினால் பொது மக்களின்
இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இப்பேரிடரிலிருந்து பொதுமக்களை மீட்கும்
பொருட்டு தமிழ்நாடு அரசால் போர்கால அடிப்படையில் நிவாரண பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காயல்பட்டிணம் மக்களுக்கு
நிவாரணம் அளிக்கும்பொருட்டு அவர்களுக்கு அத்தியாவசிய தேவையான பிரட்,
பிஸ்கட், தண்ணீர் பாட்டில், பால்பவுடர், கடலைமிட்டாய் அடங்கிய ரூ. 3,00,000
மதிப்புள்ள உணவு பொருட்கள் கொண்ட தொகுப்பு பொட்டலங்கள் 3000 எண்ணம்
நாகர்கோவில் மாநகராட்சி சார்பாக மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் வாகனம் வாயிலாக அனுப்பி வைத்தார்.
இந்த நிகழ்வில் மாநகர செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர்
கலந்து கொண்டார்கள்.