இந்திய அனைத்து படை பிரிவுகளில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற படைவீரர்களை கொண்டு 2018 ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது தான் கன்னியாகுமரி ஜாவான்ஸ் அமைப்பு ஆகும். பின்னர் 2020 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முறையாக பதிவு செய்யப்பட்டு அரசு பதிவு எண் 34/2020 கன்னியாகுமரி ஜாவான்ஸ் நலச் சங்கம் என்று செயல்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் பணியாக 2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ம் தேதி குழித்துறை பஸ் ஸ்டாப்பில் உள்ள நிழற்குடையை வண்ணம் பூசப்பட்டு பயணிகளின் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டது. அதை தொடர்ந்து அழகியமண்டபம், நெய்யூர் ஆகிய பஸ் ஸ்டாப், களியக்காவிளை, புதுக்கடை ஆகிய பேருந்து நிலையங்கள், பாலூர் சிறுவர் பூங்கா, குளச்சல் அரசு மேல்நிலைப் பள்ளி, இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளி, திட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளி, குளச்சல் கடற்கரை, லெமோரியா கடற்கரை, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி, பத்மநாபபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குளச்சல் கடற்கரையில் கீரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து ஒரு லட்சம் பனை விதைகள் நடப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் ஏழைகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் நடக்கும் ஆண்டு விழாவின் போது நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம். அதில் குறிப்பாக 10 பேருக்கு தையல் மிஷின், ஒரு பெண்ணுக்கு ரூ. 25000 திருமண உதவி தொகையாக வழங்கப்பட்டது. 10 பேருக்கு கால்நடை வளர்க்க ஆடுகள் வழங்கப்பட்டது.
ராணுவத்தில் சேர விருப்பம் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது உட்பட 71 கள பணிகள் செய்த நிலையில் 72 வது களப்பணியாக கன்னியாகுமரி ஜாவான்ஸ் நலச் சங்கம் சார்பில் தக்கலை அரசு தொடக்கப் பள்ளியில் கள பணி செய்தனர். இந்த பணியின் போது பள்ளி வளாகத்தை தூய்மை செய்தும் மரக்கன்றுகளையும் நட்டனர். இவர்களின் பணியின் முக்கிய நோக்கமே தூய்மை பசுமையான குமரி மாவட்டம் என்பதே ஆகும் என்று தெரிவித்தனர். இந்த பணிகள் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் உறுப்பினர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.