கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜனவரி மாதம் 28 ம் தேதி( ஞாயிற்றுக்கிழமை ) காலை 7.30 மணிக்கு நடக்கும் சிறப்பு திருப்பலியில் திருமணம் முடிந்து 50 ஆண்டுகளான தம்பதியினர்களை கவுரவப்படுத்தி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கும் நிகழ்வு நடக்கிறது. இந்த நிகழ்ச்சி தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி தாளாளர் அருட்பணி ஏசு மரியான் தலைமையில் பங்குத்தந்தை அருட்பணி சகாய ஜஸ்டஸ் முன்னிலையில் நடக்கிறது. மேலும் நிகழ்ச்சியில் மூத்த அருட்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். அதனை தொடர்ந்து பொன்விழா கண்ட தம்பதியினருக்கு விருந்து நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர்,பங்குத்தந்தை அருட்பணி சகாய ஜஸ்டஸ், இணை பங்குத்தந்தை, பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் ஜெஸ்டஸ், செயலாளர் ஐசக், இணை செயலாளர் லில்லி மலர், பொருளாளர் வறுவேலாள் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.