கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் கிளாரட் சபையால் கைம் பெண்களின் வாழ்வாதாரத்துக்காக நமக்காக நாம் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது தான் நலம் அங்காடி. நமக்காக நாம் என்ற கைம் பெண்களின் சுய உதவி குழு மூலம் நலம் அங்காடி நிறுவப்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இதன் கிளைகள் துவக்கப்பட உள்ளது. இது 10 கிராமங்களில் முதலில் கைம் பெண்களால் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதன்பிறகு படிப்படியாக மற்ற கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் நோக்கம் எல்லோரும் நல் வாழ்வு பெற நல் உணவை தயாரித்து பரவலாக்கம் செய்து பயன்பெற செய்வதும், இதில் பங்குபெறும் கைம்பெண்களுடைய வாழ்வாதாரம் பெருக உதவி செய்வதுமேயாகும். ஆகாரம் என்ற பெயரில் 40 தானியங்களை உள்ளடக்கிய சத்து மாவு எல்லோருக்காகவும், சர்க்கரை நோயாளிகளுக்காகவும், சிறுவர்களுக்காகவும் என்று 3 விதமான வகைகளில் தயாரிக்கப்படுகிறது. இதுபோக இயற்கை விவசாயம், ஆடு மாடுகள் வளர்த்தல், துணிப் பை தயாரித்தல், தையல் பயிற்சி போன்றவைகளும் நடந்து வருகிறது. நல வாழ்வுக்கு தேவையான நல்ல உணவு பொருட்களை வழங்குவது தான் நலம் அங்காடியின் நோக்கமாகும். இந்த நலம் அங்காடி பொருட்கள் தேவைக்கு 9489470953, 7395921412 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று நமக்காக நாம் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் அருட்பணியாளர் மரிய டேவிட் ஆன்றனி தெரிவித்தார்.