பிரதம மந்திரியின் இலவச சூரிய ஒளி மின்சாரம் திட்டம் நுகர்வோரின் தகவல்களை பதிவு செய்ய 8.3.2024 க்குள் அஞ்சல் அலுவலகங்களை அணுகவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள திட்டமே பிரதம மந்திரியின் இலவச சூரிய ஒளி மின்சாரம் திட்டம்.
இந்த திட்டத்தின் மூலம் வீட்டின் கான்கிரீட் மேற்கூரையின் மீது சோலார் பேனல் நிறுவ சோலார் பேனல்களின் விலையில் 40 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
சராசரி மாதாந்திர மின் நுகர்வு (அலகு) பொருத்தமான சோலார் பேனல் திறன் மானியம்
0-150 1-2 கே டபிள்யு 30000 முதல் 60000
150-300 2-3 கே டபிள்யு 60000 முதல் 78000,
300 3 கே டபிள்யு 78000
அஸ்பெஸ்டாஸ் சீட் அடிப்படையிலான கூரைகள் அல்லது நிலையற்ற கூரைகளை கொண்ட வீடுகளின் தரவுகள் பதிவு செய்ய முடியாது.
இந்த திட்டத்தின் மூலம் மின் கட்டணத்தை சேமிக்க முடியும். காலியான கூரையை பயன்படுத்தி கொள்ளலாம். கூடுதல் இடம் தேவையில்லை. கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதன் மூலம் நீண்ட கால ஆற்றல் சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற நுகர்வோர் தங்கள் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மின் இணைப்பு எண், வீட்டின் கான்கிரீட் மேற்கூரையின் புகைப்படம் ஆகியவற்றை பிரதம மந்திரியின் சூரிய வீடு என்ற செயலியில் 8.3.2024 க்கு முன்பாக பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும். இதற்கு வசதியாக இந்திய அஞ்சல் துறை மூலமாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
எனவே பொதுமக்களும் தங்கள் பகுதிக்கு வரும் அஞ்சல்காரரையோ அருகில் உள்ள ஏதேனும் அஞ்சல் அலுவலகத்தையோ அணுகி பிரதம மந்திரியின் இலவச சூரிய ஒளி மின்சாரம் திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கன்னியாகுமரி கோட்டத்தின் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்து உள்ளார்.