19 ம் தேதி வேலையளிப்பவர்கள் விடுப்புடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்

Share others

சென்னை முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையரின் அறிவுரையின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகின்ற 19.4.2024 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற உள்ளது.

அதனடிப்படையில், 1951ஆம் வருட மக்கள் பிரதிநித்துவச் சட்டம் மற்றும் பிரிவு 135 பி-ன் படி, தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ள அறிவுரைகளுக்கிணங்க, தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தகநிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்டநிறுவனங்கள், மோட்டார் போகக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்கள் ஆகியோர், வாக்குப்பதிவு நாளான 19.4.2024 (வெள்ளிக்கிழமை) அன்று வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றிடுவதற்கு ஏதுவாக, மேற்கண்ட தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பினை வேலையளிப்பவர்கள் வழங்கவேண்டும்.

அவ்விடுப்பு நாளுக்கான ஊதியம், சாதாரணமாக தொழிலாளிக்கு ஒருநாளுக்கு அளிக்கப்பட்டுவரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருத்தல் வேண்டும். மேலும், விடுப்பு வழங்காத நிறுவனங்கள் மீது மேற்காணும் சட்டப்பிரிவு மற்றும் விதி மற்றும் தேசிய பண்டிகை சிறப்பு விடுமுறைகள் சட்டத்தின் கீழ் ரூ.5,000 வரை அபராதத் தொகை விதிக்கப்படும். சம்பளம் பிடித்தம் செய்த நிறுவனங்கள் மீது சம்பள பட்டுவாடா சட்டத்தின் கீழ் கேட்பு மனு தாக்கல் செய்யப்படும்.

அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் வாக்குப்பதிவு தினத்தன்று (19.4.2024) தொழிலாளர்களுக்கு மேற்கண்டவாறு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்திட வேண்டும். அவ்வாறு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, தொழிலாளர்கள் புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக, சிவகங்கை மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் ஆட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதிகளுக்கான தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டிரோடு, காஞ்சிரங்காலில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் (அமலாக்கம்) அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும், தொழிலாளர்களுக்கு தேர்தல் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது தொடர்பான புகார்களை, சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம், 04575-240521 மற்றும் 98941 60047 என்ற தொலைபேசி எண்களிலும், சிவகங்கை தொழிலாளர் துணை ஆய்வாளரை 96553 46209 மற்றும் 79040 03322 என்ற அலைபேசி எண்களிலும், தேவகோட்டை தொழிலாளர் உதவி ஆய்வாளரை 99946 07014 என்ற அலைபேசி எண்ணிலும், காரைக்குடி தொழிலாளர் உதவி ஆய்வாளரை 98425 84526 என்ற அலைபேசி எண்ணிலும், சிவகங்கை முத்திரை ஆய்வாளரை 94864 37673 என்ற அலைபேசி எண்ணிலும், காரைக்குடி முத்திரை ஆய்வாளரை 99447 31719 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு, புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *