கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், கலந்தாலோசனை
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்களில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கலந்தாலோசனை மேற்கொண்டு தெரிவிக்கையில் –
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலை ஜனநாயக முறையில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்ஒருபகுதியாக தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களின் கீழ் பணியாற்றும் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக தேர்தல் குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள சேவை மையம், ஊடக கண்காணிப்பு மற்றும் சான்றிதழ் குழுவின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சுகிதா (பொது), செந்தூர் ராஜன் (தேர்தல்), ஜென்கின் பிராபாகர் (வேளாண்மை), கண்காணிப்பு அலுவலர்கள் வாணி, ஷீலா ஜாண், தனி வட்டாட்சியர்கள் ஜூலியன்தாஸ், கண்ணன், துணை வட்டாட்சியர் தேர்தல் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.