குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் திருப்பதம் சார்த்தல் (கும்பாபிஷேகம்) திருக்கொடி யேற்றி அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு திருநாள்
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள குளுமைக்காடு ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் திருப்பதம் சார்த்தல் (கும்பாபிஷேகம்) திருக்கொடியேற்றி அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு திருநாள் மே மாதம் 3ம் தேதி துவங்கி 13ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாளான இன்று (3 ம் தேதி) காலை 5 மணிக்கு பணிவிடை, 5.15 மணிக்கு துவையல் தவசு, 6 மணிக்கு திருப்பதம் சார்த்தல் (கும்பாபிஷேகம்) 7 மணிக்கு திருக்கொடி ஏற்றுதல், அய்யா வாகனத்தில் தெருவீதி வலம் வருதல் சிற்றுண்டி தருமம், 11.30 மணிக்கு பணிவிடை நடந்தது.
மதியம் 12 மணிக்கு அன்னதருமம், மாலை 3.30 மணிக்கு பணிவிடை, 4.30 மணிக்கு வெளிச்சவேள்வி, 5.30 மணிக்கு அகிலத்திரட்டு திருஏடு வாசித்தல், இரவு 8.30 மணிக்கு அய்யா வாகனத்தில் தெருவீதி வலம் வருதல், 9 மணிக்கு உகப்படிப்பு, 9.15 மணிக்கு அன்னதருமம், 9.30 மணிக்கு வெளிச்ச வேள்விக்கான பரிசு வழங்குதல் நடக்கிறது. விழா நாட்களில் காலையில் பணிவிடை, துவையல் தவசு, உச்சிப்படிப்பு, மதியம் அன்னபால் தருமம், மாலையில் பணிவிடை, அகிலத்திரட்டு திருஏடு வாசித்தல், இரவில் அய்யா வாகனத்தில் தெருவீதி வலம் வருதல், உகப்படிப்பு, அன்னதருமம் நடக்கிறது. 3 ம் நாள் விழாவில் காலை 8 மணிக்கு அகிலத்திரட்டு தருமப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பண்பாட்டு போட்டிகள், மதியம் 2 மணிக்கு பரிசளிப்பு விழா மற்றும் அகில அரங்கம் நடக்கிறது.
4 ம் நாள் விழாவில் இரவு 9.30 மணிக்கு தருமப்பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 8 ம் நாள் விழாவில் மாலை 4 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 6 மணிக்கு சுருள் வைத்தல், இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, 8.30 மணிக்கு அய்யா வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டை, 9 மணிக்கு பெரிய உகப்படிப்பு நடக்கிறது. 10 ம் நாள் விழாவான மே மாதம் 12 ம் தேதி காலையில் பணிவிடை, துவையல் தவசு, அகிலத்திரட்டு திருஏடு வாசித்தல், 11 மணிக்கு பட்டாபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, 1 மணிக்கு அன்னதருமம், 2.30 மணிக்கு தேவர் அபயம், 3 மணிக்கு அய்யா வாகனத்தில் எழுந்தருளி ஊர் சுற்றி வலம் வருதல் நடக்கிறது. முத்துக்குடை, அலங்காரம், மேளம் அணிவகுக்க அன்பர்கள் மகா மந்திரம் ஒலிக்க கோயிலில் இருந்து புறப்பட்டு மணக்கரை சந்திப்பு, புதுக்காட்டுவிளை, வில்லுக்குறி, வெள்ளச்சிவிளை சென்று கோயிலை வந்தடையும்.
11 ம் நாள் விழாவில் காலை 11 மணிக்கு அய்யா வாகனத்தில் தெருவீதி வலம் வருதல், மதியம் 12.30 மணிக்கு அன்னதருமம், இரவு 7 மணிக்கு இளையபெருமாள் வழங்கும் அய்யாவழி இன்னிசை கச்சேரி, அதிகாலை 2.30 மணிக்கு அய்யா வாகனத்தில் தெருவீதி வலம் வருதல், 4 மணிக்கு கொடி இறக்குதல், 4.30 மணிக்கு பள்ளி உணர்த்தல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள், தலைவர் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவர் செந்தில், செயலாளர் அருள்தாஸ், பொருளாளர் மணி ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.