குழித்துறை மறைமாவட்டத்தின் மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் மறை மாவட்டத்துக்கு உட்பட்ட பங்குகளுக்கு பங்குத்தந்தைகளை நியமித்து வருகிறார். அதன்படி மைலோடு புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தையாக அருட்பணி மரிய டேவிட் ஆன்றனியை நியமனம் செய்தார். பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்ட அருட்பணி மரிய டேவிட் ஆன்றனி மைலோடு புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் வைத்து நடந்த பதவியேற்பு விழாவில் காரங்காடு மறை வட்டார முதன்மை பணியாளர் அருட்பணி சகாய ஜஸ்டஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு இறைமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.