அஞ்சலகங்களில் சிறப்பு ஆதார் சேவை நீடிப்பு

Share others

பள்ளி, கல்லூரிகளின் கோடை விடுமுறையை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதார் சேவைகள் நீட்டிப்பு.
பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் பள்ளி/கல்லூரிகளின் கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள 44 அஞ்சலகங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்பட்ட சிறப்பு ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வரும் 27.5.2024 முதல் 8.6.2024 வரை நீட்டிக்கப்பட உள்ளன. புதிய ஆதார் பதிவு இலவசமாக செய்யப்படுகிறது. பெயர், முகவரி, மின்னஞ்சல், அலைபேசி, பிறந்த தேதி முதலியவற்றில் திருத்தம்/மாற்றம் செய்யவும் 10 ஆண்டுகளுக்கு மேலான ஆதார் எண்களுக்கான புதுப்பிக்கவும் ரூ.50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆதாரில் இருக்கும் கைரேகை மற்றும் கருவிழி தகவல்களை புதுப்பிக்க ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உரிய சான்றுகளோடு அருகில் இருக்கும் அஞ்சலகங்களை அணுகி இந்த சேவையைப் பயன்படுத்தி கொள்ளலாம். உங்கள் பகுதியில் அல்லது ஊரில் குறைந்தபட்சம் 100 பேருக்கு ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் செய்யவேண்டி இருப்பின் இந்திய அஞ்சல் துறையின் சிறப்பு ஆதார் முகாம் நடத்தப்பட்டு சேவைகள் வழங்கப்படும்.
பள்ளி/கல்லூரி மாணவர்களின் நலன் கருதி செய்யப்பட்டு உள்ள இந்த சிறப்பு ஏற்பாட்டை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி கோட்டத்தின் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *