கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியவுள்ள உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் அறிவுறுத்தி தெரிவிக்கையில்-
இந்தியா தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுங்கிணங்க கடந்த 19.4.2024 அன்று கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வரும் 4.6.2024 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர்கள், கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
கோணம் அண்ணா பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையினை அணிந்திருக்க வேண்டும். சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டு உள்ள கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு தரைத்தளம், வடக்கு பகுதியில் கிழக்கு பாகம் வகுப்பறை எண் 112,113 -லும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு தரைத்தளம், வடக்கு பகுதியில் மேற்கு பாகம் வகுப்பறை எண் 115, 116-லும், குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு முதல்தளம் வடக்கு பகுதியில் மேற்கு பாகம் வகுப்பறை எண் 215, 216-லும், பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு முதல்தளம், வடக்கு பகுதியில் கிழக்கு பாகம் வகுப்பறை எண் 212, 213 -லும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இரண்டாவது தளம் வடக்கு பகுதியில் மேற்கு பாகம் வகுப்பறை எண் 315, 316-லும், கிள்ளியூர் சட்மன்ற தொகுதிக்கு இரண்டாவது தளம் வடக்கு பகுதியில் கிழக்கு பாகம் வகுப்பறை எண் 312, 313-லும் நடைபெறுகிறது.
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேஜைகளுக்கு 14 முகவர்களும், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு மேஜைக்கு 1 முகவர் வீதம் 15 முகவர்கள், மொத்தமாக 6 சட்டமன்ற தொகுதிக்கும் 90 முகவர்களை நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மேஜைக்கும் வாக்குகள் எண்ணும் மேற்பார்வையாளர் ஒருவர் வாக்குகள் எண்ணும் உதவியாளர் ஒருவர் மற்றும் நுண் பார்வையாளர் ஒருவர் மற்றும் கட்டுப்பாட்டு கருவியை பாதுகாப்பு அறையிலிருந்து கொண்டு வந்து மேற்பார்வையாளரிடம் அளிக்க ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு அலுவலக உதவியாளர் நியமனம் செய்யப்பட்டிருப்பர்.
வாக்கு எண்ணும் மையத்தில் 4.6.2024 அன்று காலை 5.30 மணிக்கு வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்களுக்கு சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் பணிநியமன ஆணை வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுப்படும் அலுவலர்கள் காலை 6 மணிக்கு முன்பாக வாக்கு எண்ணும் மையத்தில் ஆஜராக வேண்டும். வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள மேஜையில், வாக்கு எண்ணும் பணிக்கான எழுது பொருட்கள் மற்றும் உபகரணங்கள் பேனா, பென்சில், சுத்தரிக்கோல், கால்குலேட்டர், எழுதும் அட்டை, பேப்பர், இதர பொருட்கள்) உள்ளதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு கருவிபின் (சுற்றுவாரியாக ) வரிசை எண்கள் அச்சடித்து ஓட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மேஜைக்கும் உரிய Control Unit-களை Strong Room-லிருந்து கொண்டு வருவதற்கென நியமிக்கப்பட்டு உள்ள கிராம உதவியாளர்களுக்கு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தனித்தனியாக பிரத்யேக வண்ணங்களில் சட்டமன்றத் தொகுதியின் பெயர் மற்றும் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள மேஜை எண் ஆகியவை குறிப்பிடப்பட்டு உள்ள டி சார்ட் வழங்கப்பட்டிருக்கும். இதன்மூலம், அந்த மேஜைக்குரிய கன்ட்ரோல் யூனிட்களை எளிதில் அடைபாளம் காண இயலும்.
மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் தலைமையில் அனைவரும் வாக்குப்பதிவின் ரகசியம் தொடர்பான உறுதிமொழி ஏற்ற பின்னர் காலை 8 மணிக்கு சட்டமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும். Strong Room-ல் வைக்கப்பட்டுள்ள கன்ட்ரோல் யூனிட்களை வாக்கு எண்ணும் மேஜைக்கு எடுத்து அனுப்பும் பணிக்காக வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர் Strong Room-நியமனம் செய்யப்பட்டிருப்பார். அவ்வட்டாட்சியர் ஒவ்வொரு சுற்றுவாரியாக வாக்குகள் எண்ணப்பட வேண்டிய வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட கன்ட்ரோல் யூனிட்களை அந்தந்த மேஜைக்குரிய கிராம உதவியாளரிடம் சரிபார்த்து வழங்க வேண்டும். அதனுடன் அந்த வாக்குச்சாவடிக்குரிய அசல் படிவம்-17 சி -ஐ உரிய மேஜைக்கு அனுப்பப்பட வேண்டும். Strong Room-லிருந்து கவுன்டிங் ஹால்க்கு கொண்டு வரப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வீடியோ கிராப் செய்ய வேண்டும். பின் கட்டுப்பாட்டுக் கருவிகள் வாக்குச்சாவடி வரிசை எண் படி வாக்கு எண்ணும் மேஜைக்கு வழங்கப்படும். வாக்குச்சாவாடி தலைமை அலுவலரால் தயார் செய்யப்பட்ட படிவம்-17 சி-ல் குறிப்பிடப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு கருவியின் வரிசை எண்ணை, மேஜைக்கு அனுப்பியுள்ள கட்டுப்பாட்டு கருவியின் மீது ஓட்டப்பட்டு உள்ள வரிசை எண்ணுடன் ஒப்பிட்டு சரிபார்த்துக் கொள்ள வேண்டும் பின் கட்டுப்பாட்டுக் கருவியின் பின்புறமுள்ள Switch-ஐ On செய்து, அதன்பின், கட்டுப்பாட்டுக்கருவிபின் Close Button Compartment சீலினை அகற்றி அதை திறந்து உள்ளே Result Section-ல் உள்ள Result Button-ன் மீது பொருத்தப்பட்டு உள்ள Green Paper Seal-ஐ விரலால் துளையிட்டு Result Button- ஐ அழுத்தவும். தற்போது கட்டுப்பாட்டுக் கருவியினை எடுத்து அனைத்து வாக்கு எண்ணும் முகவர்களுக்கு தெரியும் வகையில் உயரமாக தூக்கி காட்டப்பட வேண்டும். அப்போது கட்டுப்பாட்டுக் சுருவியின் திரையில் தோன்றும் மொத்த பதிவானான வாக்குகள் விவரம். 1 ஒவ்வொரு வேட்பாளர் பெற்ற வாக்குகள் விவரம் ஆகியவை தோன்றும். இதனை வாக்கு எண்ணும் மேஜை மேற்பார்வையாளர் அதற்கென தனியே வழங்கப்பட்டு உள்ள படிவம்-17 சி Part-II-ல் கார்பன் இணைத்து இரண்டு நகல்களில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குவிவரங்களை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். நுண் பார்வையாளரும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். பின்னர் நிரப்பப்பட்ட 17சி Part-II-ன் இரண்டு நகல்களிலும் வாக்கு எண்ணும் முகவர்களிடமும் கையொப்பம் பெற வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சீலிடும் முறை வாக்குப்பதிவு தொடர்பான ஆவணங்களை சீலிடும் முறை, வாக்கு எண்ணிக்கையின் போது எதிர்நோக்கப்படும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சுகிதா (பொது), செந்தூர் ராஜன் (தேர்தல்), உதவி தேர்தல் அலுவலர்கள் காளீஸ்வரி, தமிழரசி, சுப்பையா, கனகராஜ், லொரைட்டா, சுப்புலெட்சுமி, கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்கள் செந்தில்வேல் முருகன், சாந்தி, அப்துல் முகமது சேக், வட்டாட்சியர்கள் அனில்குமார் (அகஸ்தீஸ்வரம்), கோலப்பன் (தோவாளை), புரந்தரதாஸ் (திருவட்டார்), முருகன் (கல்குளம்), ராஜசேகர் (கிள்ளியூர்), குமாரவேல் (விளவங்கோடு), தனி வட்டாட்சியர் (தேர்தல்) வினோத், உதவி தேர்தல் வட்டாட்சியர் மணிகண்டன், வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஈடுப்படும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.