கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா 24 மணி நேரம் ஆய்வினை துவக்கி வைத்து தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் முதலாவதாக விளங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் ஆகிய மூன்று வட்டங்களில் உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. இன்று கல்குளம் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் வருவாய்துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, வழங்கல் துறை, பள்ளி கல்வித்துறை, குடிநீர் வழங்கல் துறை, சமூக நலத்துறை, நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட துறையின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியினை ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவியர்களுக்கு கற்பிக்கும் முறை குறித்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு மேற்கொண்டு, அதில் அதிக நாட்கள் விடுமுறை எடுத்த மாணவ மாணவியர்களிடம் விடுமுறை எடுப்பதை தவிர்த்து படிப்பில் அதிக கவனம் செலுத்தி நன்றாக படித்து, வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பள்ளியில் அமைந்து உள்ள கணினி அறையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. வருங்காலங்களில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்திட வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அறை, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மருந்தகம், பொதுவார்டு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டதோடு, தடுப்பூசி குழந்தைகளுக்கு தவறமால் போடப்படுகிறதா என பெற்றோர்களிடம் கேட்டறியப்பட்டது. நோயாளிகளின் மருத்துவ பதிவேடு, மேலும் பச்சிளங்குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை நேரில் பார்வையிட்டப்பட்டது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கல்குளம் வட்டத்திற்கு உட்பட்ட விலவூர் முதல்நிலை பேரூராட்சி அலுவலகம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மூலச்சல் அரசு உயர்நிலை பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களிடம் கலந்துரையாடப்பட்டதோடு, சமையல் கூடத்தினை ஆய்வு மேற்கொண்டு, உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஈத்தவிளை நியாயவிலைக்கடை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் அரிசி, பாமாயில், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்து கேட்டறியப்பட்டதோடு, நியாயவிலைக்கடையில் கோணிப்பைகள் மற்றும் நீண்ட நாட்களாக இருப்பில் வைக்கப்பட்டு உள்ள பொருட்களை அப்புறப்படுத்துமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஈத்தவிளை கேஎன்ஹெச் பெண் குழந்தைகள் காப்பகத்தினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, சிஎஸ்ஐ மழலையர் தொடக்கப்பள்ளி குழந்தைகளுடன் கலைந்துரையாடி புகைப்படம் எடுக்கப்பட்டது.
சரல்விளை அங்கான்வாடி மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முட்டைக்காடு ஜவஹர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் உதவிகள் மற்றும் நகை கடன் தள்ளுபடி குறித்து அலுவலர்களுடன் கேட்டறிப்பட்டது. கோதநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பருத்திவிளை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு, வெளிநேயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 15 வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு உள்ள வட்டார சுகாதார மையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மருத்துவமனைக்கு வருகைப்புரிந்த கர்ப்பிணி பெண்களுடன் உரையாடப்பட்டது. தொடர்ந்து பத்மநாபபுரம் நகராட்சிக்கு உட்பட்ட மருந்துக்கோட்டையில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை மட்கும் மற்றும் மட்காத குப்பைகள் என தரம்பிரித்து இயற்கை உரம் தயாரித்து, சந்தைப்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து, கல்குளம் வருவாய் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்படும் கோப்புகள் குறித்து கேட்டறியப்பட்டது. பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகம், தக்கலை சந்தை, தக்கலை பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்படும் ஆதிதிராவிடர் ஆண்கள் தங்கும் விடுதி நேரில் பார்வையிட்டு, விடுதியினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திட பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் தக்கலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் இ – சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் தக்கலை சார்பதிவாளர் அலுவலகம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தக்கலை பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்ததோடு, முதலமைச்சரின் மகளிர் விடியல் பயண பேருந்தில் ஏறி பயணிகளிடம் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தெரிவித்தார்.
ஆய்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி, திட்ட இயக்குநர் பாபு (ஊரக வளர்ச்சி முகமை), பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் தமிழரசி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சேக் அப்துல் காதர், டாஸ்மாக் பொது மேலாளர் சங்கரலிங்கம், சிவகாமி (கூட்டுறவுத்துறை இணை பதிவாளர்), இணை இயக்குநர்கள் ஆல்பர்ட் ராபின்சன் (வேளாண்மை), ராதாகிருஷ்ணன் (கால்நடைதுறை), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, உதவி இயக்குநர் கலால் லொரைட்டா, துணை இயக்குநர்கள் ஷீலா ஜாண் (தோட்டக்கலைத்துறை), சின்னகுப்பன் (மீன்வளத்துறை), சில்வெஸ்டர் சொர்ணலதா (வேளாண்பொறியில் துறை), கீதா (வேளாண்மை விற்பனை பிரிவு), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிநல அலுவலர் கனகராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா இம்மானுவேல், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி, மாவட்ட உணவு அலுவலர் செந்தில்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, மாவட்ட சமூகநல அலுவலர் (பொ) விஜயமீனா, செயற்பொறியாளர்கள் அருள்சன் பிரைட் (நீர்வளத்துறை), கல்குளம் வட்டாட்சியர் முருகன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜைய்யன், ஜவஹர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர் அருள், பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் (பொ) செந்தில்குமார், துணை வட்டாட்சியர் சந்திரசேகர், பேரூராட்சி தலைவர்கள், வட்டார மருத்துவ அலுவலர் அனிஷ், தலைமையாசிரியர்கள் ஜாண்சன் (அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி), வில்சன் (அரசு தொடக்கப்பள்ளி), துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.