கன்னியாகுமரி மாவட்டம் மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா ஆகஸ்ட் மாதம் 6 ம் தேதி திருகொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த ஆலயம் குழித்துறை மறைமாவட்டத்தில் உள்ள மாத்திரவிளை மறைவட்ட முதன்மை ஆலயமாக உள்ளது. இந்த ஆலயத்தில் திருவிழா துவங்க இருப்பதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பங்குத்தந்தை அருட்பணி கலிஸ்டஸ்சை சந்தித்து கேட்டபோது படு பிசியாக இருந்த நிலையிலும் குமரி குரல் பத்திரிக்கைகாக பாதுகாவலர் பெருவிழா நிகழ்வுகளை விளக்கி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.