மார்த்தாண்டம் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதியில் அமைச்சர் ஆய்வு

Share others

கன்னியாகுமரி மாவட்டம்,  பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும்  சிறு துறைமுகங்கள்   துறை அமைச்சர் வேலு ,  பால்வளத்துறை அமைச்சர்   மனோ தங்கராஜ்  தலைமையில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா,  முன்னிலையில் மார்த்தாண்டம் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதியை நேரில் பார்வையிட்டு, செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-
 தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டிற்கு உட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள்

மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக புதிதாக சாலைகள் அமைப்பது, பழுதடைந்த சாலைகளை போர்கால அடிப்படையில் சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதோடு, மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் சாலைகளை உறுதிப்படுத்துவது, விரிவுப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக மார்த்தாண்டம் உயர்மட்ட இரும்பு மேமம்பாலம் தே.நெ.47ல் கி.மீ.604/314-ல் ஆரம்பித்து கி.மீ.606/705 வரை 2.4 கி.மீ நீளத்திற்கு ரூ.320 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் 7.5.2024 அன்று பாலத்தின் தூண்கள் 101-ற்கும் 102க்கும் இடையில் உள்ள பாலத்தின் ஓடுதளத்தில் கம்பி தெரியும் அளவிற்கு பழுது ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பொருட்டு தலைமைப்பொறியாளர் (நெ) புலனாய்வு மற்றும் வடிவமைப்பு சென்னை அவர்கள் 8.5.2024 அன்று உடனடியாக பார்வையிட்டு அவர்களின் அறிவுரைகளின் அடிப்படையில் நுண்நுட்ப கான்கீரிட் மூலம் 10.5.2024 அன்று தார் சாலை போடப்பட்டு அன்றே சாலை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இது தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையின் சாதனையாகும்.
மேலும் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் சாலையில் 12 கி.மீட்டர் தூரம் வண்டி வாகனங்கள் செல்லுவதற்கு ஏதுவாக சாலையை சீரமைத்து தருமாறு அமைச்சர் , சட்டமன்ற உறுப்பினர்கள் என்னிடம் கோரிக்கை வைத்து உள்ளார்கள். அதனை விரைந்து சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மார்த்தாண்டம் மேம்பாலம் மற்றும் மேம்பாலத்தின் கீழ் அமைந்து உள்ள சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு , செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆய்வுகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் .பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வராஜ், தொழில்நுட்ப சிறப்பு அலுவலர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர்கள் ஜெயராணி, சாந்தி, தலைமை பொறியாளர் பன்னீர் செல்வம், நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, குழித்துறை நகர்மன்ற தலைவர் ஆசைதம்பி, துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *