கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு….. செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வல பாதுகாப்பு பணிகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சிகளானது இன்று மற்றும் நாளை(14, மற்றும் 15-9-24) நடைபெற இருக்கிறது. இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக விநாயகர் ஊர்வலம் நடைபெறும் போது பொதுமக்கள் போக்குவரத்து இடையூறன்றி பயணிக்கும் விதமாக சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு சில மாற்று பாதைகள் பயன்படுத்தபட உள்ளது. ஆகையால் மேற்கண்ட நிகழ்ச்சி நடைபெறும் தினங்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பயணிகள், ரயில், விமான பயணங்கள் மற்றும் வெளியூர் செல்லும் பொதுமக்கள் முன்னேற்பாடாக தங்களது பயணத்தை தயார் செய்து எந்தவித சிரமமின்றி பயணிக்க இதன் மூலம் அறிவுறுத்தபடுகிறது. விநாயகர் சிலை கரைப்பு ஊர்வல நிகழ்ச்சிகளின் பாதுகாப்புக்காக கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டு கொள்ளபடுகிறது