போதையில்லா குமரி மாவட்டம் எனும் திட்டத்தின் அடிப்படையில் ஹோலிகிராஸ்
கல்லூரியும், திருப்புமுனை போதைநோய்
நலப்பணியும் இணைந்து 100 மணிநேர டிப்ளமோ படிப்பை நவம்பர் 23
தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜுலை வரை நடத்துகின்றன.
மனிதர்களாகிய நாம் இன்று மகிழ்ச்சியாக வாழ்ந்து
கொண்டிருக்கிறோமா நாம் அனைவரும் நன்மையே கேட்க
வேண்டிய கேள்வி உண்மையிலேயே நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக
வாழத்தான் விரும்புகிறோம். ஆனால் எல்லோராலும் மகிழ்ச்சியாக
வாழ இயலவில்லை. பொதுவாகவே, நாம் விரும்பாமலேயே நமது
அனுமதியின்றி நமது குடும்ப, சமூக வாழ்வு சூழ்நிலைகள் நமக்கு
மன அழுத்தங்களையும், உணர்ச்சி சிக்கல்களையும் நாளுக்கு நாள்
அதிகமாகி கொண்டே இருக்கின்றன.
யதார்த்தமாக பார்த்தால் ஒருவரின் வாழ்வுக்கு இணையாக ஏதாவது
இருக்கிறதா இல்லை. நமது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளில்
இருந்து ஏற்படும் பல எதிர்மறைப் பதிவுகள் நம் ஆழ்மனதில்
இருந்து கொண்டு எதிர்மறை சிந்தனைகளையும், உணர்வுகளையும்,
நடத்தைகளையும் உருவாக்குகின்றன என்கிறார்கள்
உளவியலாளர்கள்.
நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் இந்த உளப்பாதிப்புகளில்
இருந்து விடுபட்டே ஆக வேண்டும். வாழ்வை முறையாக வழிப்படுத்த உள விழிப்புணர்வுப் பாதையில்,
எப்படி உளப்பாதிப்பு ஏற்பட்டது.
எவ்வளவு உளப்பாதிப்பு
ஏற்பட்டுள்ளது எவ்வாறு உள நலப்பாதிப்பில் இருந்து வெளிவருவது
என்பதை எந்த உளநலமுறையைக் கையாண்டு, என்ன
உளநுட்பத்தைப் பயன்படுத்தி எப்படி உள்ளத்தை சீரமைக்கலாம்
என்பதை ஒவ்வொரு நபரும் தெரிந்து கொள்ள இந்த பயிற்சி
வகுப்பானது பேருதவியாக இருக்கும்.
இந்த பயிற்சியானது உளநலமுறைகளில்
ஆற்றுப்படுத்துதல் அணுகுமுறைகளில்
பயிற்சி பெற்றவர்கள்,
தேர்ச்சி பெற்றவர்கள்,
வழிகாட்டுதலில் அனுபவம் பெற்றவர்களை கொண்டு நாகர்கோவில்
குருசடி ஹோலி கிராஸ் கல்லூரியில் வைத்து 20 வார வகுப்பாக
(சனிக்கிழமை மட்டும்) நடக்கின்றது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள்
நாகர்கோவில் மருத்துவக் கல்லூரி சாலையில் ஆயர் இல்ல
வளாகத்தில் அமைந்து உள்ள திருப்புமுனை போதைநோய்
அலுவலகத்தில் பெயரை பதிவு செய்யலாம். அல்லது 94867 96009 என்ற
தொலைபேசி எண்ணிலும் பதிவு செய்து பயிற்சி வகுப்புகளில்
கலந்துக்கொள்ளலாம் என திருப்புமுனை இயக்குநர் முனைவர்
பிரான்சிஸ் சேவியர் நெல்சன் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பு பயிற்சி இயக்குநர் முனைவர்
பிரான்சிஸ் சேவியர் நெல்சன் தலைமையில் நடந்தது. திருப்புமுனை
செய்தி தொடர்பாளர் அருள் குமரேசன், அருட்சகோதரி பேசில் றோஸ், ஆனி, பிலோமினாள், ஜீடு உட்பட பலர் கலந்து கொண்டனர்.