தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், நாகர்கோவில் மண்டலம் சார்பாக , ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக முதல் முறையாக கன்னியாகுமரியில் இருந்து பம்பா ( சபரிமலை ) சிறப்பு பேருந்துகள் 29.11.24 முதல் 20.1.2025 வரை இயக்கப்படுகிறது.
கன்னியாகுமரி – பம்பா இயக்கப்படும் பேருந்து நாகர்கோவில், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, பத்தனம்திட்டா, நிலக்கல் வழியாக செல்கிறது.
பயணக்கட்டணம்
கன்னியாகுமரி – பம்பா ரூ. 383,
நாகர்கோவில் – பம்பா ரூ. 364,
கன்னியாகுமரி மாலை 6 மணிக்கு – நிலக்கல் ரூ.345 ,
நாகர்கோவில் மாலை 6 மணிக்கு – நிலக்கல் ரூ.326 என்று கட்டணம் ந வசூலிக்கப்படுகிறது.தொடர்புக்கு
வடசேரி பேருந்து நிலையம்
9487599373, கன்னியாகுமரி பேருந்து நிலையம் 9487599087 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.