தமிழக வெற்றிக் கழகம் வில்லுக்குறி பேரூர் தலைமை அலுவலகம் திறப்பு மற்றும் கட்சி கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட தலைவர் ஆற்றூர் சபின் தலைமை வகித்து அலுவலகத்தை திறந்து வைத்து கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார்.
முன்னதாக கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூர் பகுதிகளில் மாடத்தட்டுவிளை, பண்டாரக்காடு பகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் முன்னிலையில் கொடியேற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எட்வின், துணை செயலாளர் ஆன்றனி, இணை செயலாளர் சுனில் குமார், குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் காவலன் அசோக், வில்லுக்குறி பேரூர் தலைவர் வினேஷ் சகாய் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கழக தோழர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.