இலந்தவிளை தூய திருக் குடும்ப ஆலய பங்கு குடும்ப விழா டிசம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 6 மணிக்கு முன்னோர் நினைவு சிறப்பு திருப்பலி நடக்கிறது.மாலை 5.30 மணிக்கு கொடிப்பவனி புனித ஜார்ஜ் குருசடியில் இருந்து நடக்கிறது. 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருக்கொடியேற்றம், 7 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி குழித்துறைமறை மாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நடக்கிறது. விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது. 3 ம் நாள் விழாவில் காலை 7 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையும், 7.30 மணிக்கு திருப்பலியும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர் நடக்கிறது. 5 ம் நாள் விழாவில் இரவு 10 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி பங்குத்தந்தை அருட்பணி சகாய ஜஸ்டஸ் தலைமையில் நடக்கிறது. 12 மணிக்கு மரவிழா நடக்கிறது. 8 ம் நாள் விழாவில் காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலியும், 9.30 மணிக்கு முதல் ஒப்புரவு தியானமும் நடக்கிறது. 9 ம் நாள் விழாவான 28 ம் தேதி காலை 8.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி புலியூர்குறிச்சி திருத்தல அதிபர் பேரருட்பணி இயேசு ரெத்தினம் தலைமையில் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நடக்கும் திருப்பலி முளகுமூடு வட்டார முதல்வர் அருட்பணி டேவிட் மைக்கேல் தலைமையில் நடக்கிறது. இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 10 ம் நாள் விழாவில் காலை 9.30 மணிக்கு திருவிழா கூட்டுத் திருப்பலி குழித்துறை மறை மாவட்ட நிதி பரிபாலகர் அருட்பணி ஜெயக்குமார் தலைமையில் கோட்டாறு மறைமாவட்ட அன்பிய இயக்குநர் அருட்பணி சகாய கிளாசின் அருளுரையோடு நடக்கிறது. திருப்பலியை தொடர்ந்து அன்பு விருந்தும் மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், 6.30 மணிக்கு திருக்கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு இனிய சங்கமம் என்ற பல்சுவை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்கு பேரவையினர், காரங்காடு வட்டார முதல்வரும் பங்குத்தந்தையுமாகிய அருட்பணி சகாய ஜஸ்டஸ் ஆகியோர் இணைந்து செய்து உள்ளனர்.