சேவியர்புரம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்கு பாதுகாவலர் திருவிழா டிசம்பர் மாதம் 20 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது தொடர்ந்து 29 ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் விழாவில் மாலையில் திருஜெபமாலை, புகழ்மாலை, திருக்கொடியேற்றம், திருவிழா கூட்டுத் திருப்பலி குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி சேவியர் பெனடிக்ட் தலைமையில் நடந்தது. இதில் மத நல்லிணக்கம் சார்பாக கொடியேற்றுதல் நடந்தது.
இந்த மத நல்லிணக்கம் கொடியேற்றத்தில் கிறிஸ்தவம் சார்பில் குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி சேவியர் பெனடிக்ட், இந்து சார்பில் குமாரகோயில் சுவாமி நிஜானந்தா சின்மயா, இஸ்லாமியம் சார்பில் மௌலவி ஹாபிழ் சுல்பிக்கர் அரி ஜலாலி இமாம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரவில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. விழா நாட்களில் மாலையில் திருஜெபமாலை, புகழ்மாலை, திருவிழா கூட்டுத் திருப்பலியும் இரவில் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. 3 ம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு திருவிழா கூட்டுத் திருப்பலி நடக்கிறது. 5 ம் நாள் விழாவில் இரவு 12 மணிக்கு கிறிஸ்து பிறப்பு திருப்பலி நடக்கிறது. 6 ம் நாள் விழாவில் காலை 10 மணிக்கு ஊர் பொதுமக்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. 8 ம் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு திருமுழுக்கு திருவிழா கூட்டுத் திருப்பலி நடக்கிறது. 9 ம் நாள் விழாவில் காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருவிழா கூட்டுத் திருப்பலி குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நடக்கிறது. இரவு 9 மணிக்கு பாதுகாவலரின் தேர்ப்பவனி நடக்கிறது. 10 ம் நாள் விழாவான 29 ம் தேதி காலை 9.30 மணிக்கு திருவிழா கூட்டுத் திருப்பலி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு திருக்கொடியிறக்கம், தொடர்ந்து அன்பின் விருந்து, பாதுகாவலரின் தேர்ப்பவனியும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல் நடக்கிறது. 7 மணிக்கு இஸ்ரயேல் வீரன் நாடகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருட்பணி மரிய டேவிட் ஆன்றனி, இணை பங்குத்தந்தை அருட்பணி தானியேல். , பங்கு அருட்பணி பேரவை, அருட் சகோதரிகள், பங்கு இறைமக்கள் இணைந்து செய்து இருந்தனர்.