கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மறைமாவட்டத்திற்கு உட்பட்ட மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா ஜனவரி மாதம் 17 ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 26 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் 8 ம் நாள் கிடா கறியோடு நடந்த பகிர்வின் சமபந்தி விருந்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.