கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலாய ஓட்டம் இன்னும் சில தினங்களில் வர உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பஸ்கள்
மார்த்தாண்டத்தில் இருந்து காலை 7 மணிக்கும் திருமலை 7.45 மணிக்கும்
திக்குறிச்சியில் 8.30 மணிக்கும்
திற்பரப்பு 10 மணிக்கும் திருநந்திக்கரை 10.45 மணிக்கும்
பொன்மனை 11.45 மணிக்கும் பன்னிபாகம் மதியம் 12.45 மணிக்கும்
கல்குளம் 1.30 மணிக்கும் மேலாங்கோடு
2 .15 மணிக்கும் திருவிடைக்கோடு
2 .45 மணிக்கும் திருவிதாங்கோடு
3.45 மணிக்கும் திருபன்றிகோடு மாலை 5 மணிக்கும் திருநட்டாலம்
5.30 மணிக்கும் மீண்டும்
மார்த்தாண்டம் 6 மணி சென்றடைகிறது. மொத்த
பயண தூரம் 103 கி.மீ மற்றும் பயணிகளுக்கு பயண கட்டணம்
ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஒரு பகுதியில் இருந்தோ அல்லது ஊரில் இருந்தோ குறைந்தது 50 பக்தர்கள் சேர்ந்து சிவாலாயங்களை தரிசிக்க வேண்டும் என்றாலும் தனியாக அரசு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
12 சிவாலயங்களை தரிசிக்க 300 ரூபாயில் அரசு பஸ்
![](https://kumarikural.in/wp-content/uploads/2025/02/IMG-20250105-WA0008.jpg)