வேக ராடார் துப்பாக்கி மூலம் கனரக வாகனங்களின் வேகங்கள் கண்காணிப்பு. ஒரே நாளில் அதிவேகமாக சென்ற 12 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில், தக்கலை போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு காவல் ஆய்வாளர் அருண் தலைமையிலான போலீசார் வேக ராடார் துப்பாக்கி பயன்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறி, அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி வந்த 12 கனரக வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது.இந்த நடவடிக்கைகள் வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
மேலும் குடிபோதையில் ஓட்டி வந்த நான்கு கனரக வாகனம், அதிக பாரம் ஏற்றி வந்த வாகனம் உட்பட 26 கனரக வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
குடிபோதையில் கனரக வாகனம் ஓட்டி வந்த 4 பேர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
மேலும் அதிக பாரத்துடன் ஏற்றி வந்த கனரக வாகனம் மற்றும்,
சாலைகளில் செல்லும் போது கனரக வாகனங்களில் 16 டயர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை மீறி இயக்கப்பட்ட 21 வாகனங்கள் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும் என எச்சரிக்கப்படுகிறது.