கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஒரே நாளில் மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், அதிபயங்கரமாக வாகனத்தை இயக்கியவர்கள் உட்பட 90 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி, கன்னியாகுமரி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில், கன்னியாகுமரி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார் நடத்திய வாகன சோதனையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்த 12 பேர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அதிவேகமாக மற்றும் சாலை விதிகளை மதிக்காமல் வாகனத்தை இயக்கியவர்கள் 90 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கைகள் வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும்.
ஒரே நாளில் 90 வாகனங்கள் மீது நடவடிக்கை
