கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

Share others

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக செயல்பாடுகள் குறித்து தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் துறை அலுவலர்களுடன் கலந்தலோசனை நடத்தினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தலைமையில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் அய்யன் திருவள்ளுவர் சிலை 25ம்ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அய்யன் திருவள்ளுவர் சிலையை சென்றடையவும், படகு சவாரி வசதியை மேம்படுத்துவதற்காக 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும் என அறிவித்தார்.
அதன் அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் வேலு நேற்று சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி மைய கூட்டரங்கில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும் சுவாமி விவேகனாந்தர் பாறைக்கும் நெடுஞ்சாலைத்துறையினரால் கண்ணாடி இழைப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மேலும் 3 பயணிகள் படகுகள் வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் கண்ணாடி இழை தரைத்தள பாலம் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்ததைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து அய்யன் திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை தரைத்தளபாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு பெருமிதம் அடைகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை புரிவதால் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக பூம்புகார் கப்பல் 3 பயணிகள் படகுகள் வாங்கப்பட உள்ளது.
தற்போது உள்ள பயணிகளின் படகுகளின் தன்மைகள் குறித்தும், உறுதித்தன்மை குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. தொடர்ந்து சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக ஆன்லைன் மூலமாக நுழைவுச்சீட்டு வாங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக புதுப்பிக்கப்பட்ட புதிய இணையத்தளம் விரைவில் துவக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ், தெரிவித்தார்.
கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் சத்தியமூர்த்தி, துணை இயக்குநர் மீன்வளத்துறை சின்னகுப்பன், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் ராமலிங்கம், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலளார் ஆறுமுகம், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *