கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கோயில் திருவிழா பாதுகாப்பு பணியில், காணாமல் போன குழந்தை மற்றும் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த குமரி மாவட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டினார். கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கோயில் திருவிழாவானது 2.3.2025 ம் தேதியன்று கொடியேறி நடைபெற்று வந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அனைத்து துறையினர் உதவியோடு பாதுகாப்பு பணியில் எந்தவித சிறு அசம்பாவிதமும் இன்றி சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் மண்டைக்காடு திருவிழா கூட்ட நெரிசலில் காணாமல் போன குழந்தை மற்றும் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்கள், ஆகியவற்றை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். சிறப்பாக செயல்பட்டு பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், குளச்சல் உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டினார்.
போலீசாரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்
