கன்னியாகுமரி மாவட்டத்தில் 26.8.2023 அன்று நடைபெற உள்ள நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பளார் ஹரி கிரன் பிரசாத் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்களுக்கு தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரைகள் வழங்கினார்.
/
மேற்படி நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செயின்ட் சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி, பொன் ஜெஸ்லி இன்ஜினியரிங் கல்லூரி, அமிர்தா இன்ஜினியரிங் கல்லூரி, சிஎஸ்ஐ இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய 4 தேர்வெழுதும் மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3844 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கான பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 631 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.