கியூ ஆர் கோட் மூலமாக போதை விழிப்புணர் டிஜிட்டல் கண்காட்சி சங்கமம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் சாலையில் உள்ள திருப்புமுனை போதை நோய் அலுவலக வளாகத்தில் வைத்து நடந்தது. இந்த கண்காட்சியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு திருப்புமுனை போதை நோய் நலப்பணி இயக்குனர் அருள்பணி பிரான்சிஸ் சேவியர் நெல்சன் தலைமை வகித்தார். கோட்டாறு மறை மாவட்ட பணிக்குழுக்களின் இயக்குனர் அருட்பணி எட்மன்ட், இயேசு சபை போதை நோய் பணிக்குழு இயக்குனர் அருட்பணி பிரான்சிஸ், திருப்புமுனை செய்தி தொடர்பு பொறுப்பாளர் அருள் குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போதை விழிப்புணர்வு
