கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் , நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற ஜூன் மாதம் 28 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒழுங்குச் செய்யப் பட்டு உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் சென்னையைச் சார்ந்த 3 நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்காக தேர்வு செய்யப் பட உள்ளனர். 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் அந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
இந்த முகாமின் முன்பதிவு இணையவாயிலாக *https://bit.ly/NCRJ2025* என்ற இணையத்தளத்தில் பதிவுசெய்து இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கேட்டுக் கொண்டு உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
