கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவில் மாவட்டம் முழுவதும் நான்கு சக்கர வாகனங்களில் ஹெட் லைட் கருப்பு ஸ்டிக்கர் இல்லாமல் வரும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விபத்தில்லா குமரியை உருவாக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பல்வேறு விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் வாகனங்களின் முகப்பு விளக்கில் டாஸ்லிங் ஸ்டிக்கர் ஒட்டாமல் ஹை பீம் வைத்து எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூச்சம் ஏற்பட்டு சரியான முறையில் பார்வை தெரியாமல் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை காணப்படுகிறது.
இத்தகைய விபத்துக்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் வாகனங்களின் ஹெட்லைட்டில் டாஸ்லிங் ஸ்டிக்கர் இல்லாமல் வரும் வாகனங்கள் இது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்களுக்கு கன்னியாகுமரி காவல்துறை சார்பாக ஒரு அன்பான வேண்டுகோள் உங்களது வாகனங்களில் முகப்பு விளக்கு பகுதியில் டாஸ்லிங் ஸ்டிகர் இல்லாமல் இருந்தால் உடனடியாக டாஸ்லிங் ஸ்டிகர் ஒட்டிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் இதனை மீறி டாஸ்லிங் ஸ்டிகர் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பதனை தெரிவித்து கொள்ளப்படுகிறது
சாலை விதிமுறைகளை கடைப்பிடிப்போம் விபத்தில்லா குமரியை உருவாக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் முயற்சியில் கைகோர்ப்போம்.
டுடே கிளிப்
