கன்னியாகுமரி மாவட்டம் நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட மாடத்தட்டுவிளை பகுதியில் செந்தாமரை குளம் உள்ளது. இந்த குளத்தில் மாடத்தட்டுவிளை பகுதியில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள ஊர்களில் இருந்தும் ஏராளமானவர்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்தில் பாசிகள் படர்ந்து குளம் முழுவதும் காணப்பட்டதால் மாடத்தட்டுவிளை மரியாயின் சேனையினர், இளைஞர் இயக்கம், கத்தோலிக்க சங்கம் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து பாசிகளை அகற்றும் பணியை செய்தனர். இந்த பாசி அகற்றும் பணியை பலதரப்பினரும் பாராட்டினார்கள்.
செந்தாமரை குளத்தில் பாசி அகற்றும் பணி
