மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் இளைஞர் இயக்கம் சார்பில் மாடி வீட்டு தோட்ட பயிற்சி முகாம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் சமூக நலக்கூடத்தில் வைத்து நடந்தது. இந்த பயிற்சி முகாமுக்கு பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய ராஜேந்திரன் தலைமை வகித்தார். பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் பால் ததேயுஸ், இணை செயலாளர் ஜோஸ்வால்டின், பொருளாளர் சார்லஸ், ஓய்வுபெற்ற வன அதிகாரி தங்கமரியான், புனித செபஸ்தியார் இளைஞர் இயக்கம் தலைவர் லிபின், துணைத் தலைவர் அஜின், செயலாளர் லேனால்டு, துணை செயலாளர் அருண், பொருளாளர் ராகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுபா பயிற்சி அளித்தார். ரெக்ஸ்சிலின், டேவிட், பிரான்சீஸ், ரிபின் மற்றும் இளம் கிறிஸ்தவ மாணாக்கர் நிர்வாகிகள், உறுப்பினர்கள், இளம் பெண்கள் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமில் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை போன்ற பயிர் வகை விதைகள் வழங்கப்பட்டது.
மாடத்தட்டுவிளையில் வீடு மாடி தோட்ட பயிற்சி
