மைலகோடு புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலய பாதுகாவலர் பெருவிழா செப்டம்பர் மாதம் 26 ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 6.15 மணிக்கு திருப்பலி தொடர்ந்து கல்லறை மந்திரிப்பு முளகுமூடு மறைவட்ட முதல்வர் பேரருள்பணி டேவிட் மைக்கிள் தலைமையில் நடக்கிறது. மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம், 6.45 மணிக்கு திருப்பலி காரங்காடு மறைவட்ட முதல்வர் பேரருள்பணி சகாய ஜஸ்டஸ் தலைமையில் மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை அருள்பணி மரிய ராஜேந்திரன் அருளுரையோடு நடக்கிறது. விழா நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது. 8 ம் நாள் விழாவில் காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடக்கிறது. 9 ம் நாள் விழாவில் காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு பங்கின் பாதுகாவலர் புனித மிக்கேல் முதன்மை தூதரின் அலங்காரத் தேர்பவனி நடக்கிறது. 10 ம் நாள் விழாவில் காலை 6.15 மணிக்கு திருப்பலி, 9.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு தேர்பவனி, 7 மணிக்கு நற்கருணை ஆசீர், 7.45 மணிக்கு கொடி இறக்கமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்கு அருள்பணி பேரவை, அருள் சகோதரிகள், பங்கு அருள்பணியாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
மைலகோடு புனித மிக்கேல் முதன்மை தூதர் ஆலய பாதுகாவலர் பெருவிழா பங்குத்தந்தை அருள்பணி மரிய டேவிட் ஆன்றனி அனைவரையும் அழைக்கிறார்
