இந்திய அஞ்சல் துறை சார்பாக நடைபெறும் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி 2025-26
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 8 வரை நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு அனைத்து வயதினரும் வரவேற்கப்படுகின்றனர். போட்டிக்கான கடிதத்தை, எனது முன் மாதிரிக்கு கடிதம் என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இவற்றில் ஏதாவது ஒரு மொழியில் எழுதி முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை – 600002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உள்நாட்டு கடித பிரிவில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும், கடித உறை பிரிவில் 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் கைப்பட எழுத வேண்டும். 1.1.2025 அன்று 18 வயது நிறைவு பெற்றவர் / நிறைவு பெறாதவர் என்ற வயது சான்று கடிதத்தில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். போட்டியில் பங்கு பெறுவோரின் பெயர் மற்றும் இருப்பிட முகவரியை கடிதத்தில் தவறாமல் குறிப்பிட வேண்டும். இந்த போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 25000, இரண்டாம் பரிசு ரூ. 10000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 5000 வழங்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 50000, இரண்டாம் பரிசு ரூ. 25000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 10000 வழங்கப்படும். பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் இந்த போட்டியில் பங்குபெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கன்னியாகுமரி கோட்டம் அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி முதல் பரிசு ரூ. 50,000 அறிவிப்பு
