கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் 71-வது நினைவு நாளையொட்டி சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்து உள்ள, அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கந்தசாமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுஷ்யா, சுசீந்திரம் பேரூராட்சி துணைத்தலைவர் சுப்பிரமணியபிள்ளை, வருவாய் ஆய்வாளர் பிரேமகீதா, கிராம நிர்வாக அலுவலர் வளர்மதி, பேரூராட்சி உறுப்பினர்கள் காசி, தாணுமாலையபெருமாள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
நினைவு நாள்
