வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட 9 முதல் 15 வரை உள்ள வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகம் நடந்தது. வில்லுக்குறியில் நடந்த இந்த முகாமில் குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மேயர் மகேஷ் கலந்து கொண்டு பெறப்பட்ட மனுக்கள் மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.
இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, பட்டாமாறுதல், சாலை, குடிநீர் வசதி, பிறப்பு இறப்பு சான்று, சொத்துவரி பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, வாரிசு, ஜாதி, வருமானச் சான்று ஆகியவை கேட்டு மனுக்களை கொடுத்தனர். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் முகாமை துவக்கி வைத்தார். வில்லுக்குறி பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி, செயல் அலுவலர் ராமு, துணைத் தலைவர் ராமலிங்கம், வார்டு கவுன்சிலர்கள் ஆன்சிலா பேட்ரிக், புனிதா, ஸ்டான்லி, சுப்பிரமணியன், கிரிஜாம்பிகா, எட்வர்ட்திலக், சரிதா, மகேஷ், வில்லுக்குறி பேரூர் திமுக செயலாளர் சகாய கிறிஸ்துதாஸ், திமுக நிர்வாகிகள் ஜெய விஜயன், வழக்கறிஞர் அருள் பிரபின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வில்லுக்குறியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
