
மார்த்தாண்டம் உட்கோட்டத்தில் பெண்கள், குழந்தைகள், மற்றும் முதியவர்கள் பாதுகாப்பிற்கு காவல் உதவி எண்கள் கியூஆர் குறியீடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெளியிட்டார்.
ஸ்கேன் இணைப்பு தீர்வு
ஆட்டோ மற்றும் பொதுத்துறை வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் காவல்துறை மற்றும் அனைத்து துறை எண்கள், கம்ப்ளைன்ட் போர்டல் அடங்கிய கியூஆர் குறியீட்டை 4-10-2025 அன்று தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக மார்த்தாண்டம் உட்கோட்டத்தில் காவல் உதவி எண்கள் கியூஆர் குறியீடு வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது.
உதவி எண்கள்
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வாட்ஸ் அப் எண், அனைத்து காவல் நிலையங்களின் தொலைபேசி எண்கள், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு தொலைபேசி எண்,
தீயணைப்புத் துறை, குழந்தை பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு நெடுஞ்சாலைத்துறை,
ஆம்புலன்ஸ் உதவி மற்றும் அனைத்து துறை உதவி எண்கள்
புகார்கள் பதிவு செய்ய
தமிழ்நாடு காவல்துறை குடிமக்கள் போர்டல், சைபர் குற்றங்கள் பதிவு செய்வது, செல்போன் மிஸ்ஸிங்.
சமூக வலைதள பக்கங்கள்
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,
டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தள பக்கங்கள் ஆகியவற்றை இந்த கியூஆர் கோடு பயன்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் நல்லசிவம், மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளர் வேளாங்கண்ணி உதய ரேகா, மார்த்தாண்டம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்லசுவாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.